Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாடா குழும கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகத் தீர்வு

டாடா குழும கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகத் தீர்வு

அந்நிய முதலீடுகள் வெளியேறுவது தொடர்பாகச் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்களிடையே நிலவும் கவலைகளை அரசு உணர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் டாடா குழுமத்தில், டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரரான டாடா டிரஸ்ட்ஸ் இடையிலான கருத்து வேறுபாடுகளை விரைவில் சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியி பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியப் பொருளாதாரத்தில் டாடா குழுமம் மிகவும் முக்கியமான அங்கமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்து வேறுபாடுகளைச் சுமுகமாகத் தீர்த்து, விரைவில் இயல்புநிலையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த விவகாரம் இவ்வாறு பொதுவெளியில் வெளிப்படக் கூடாது. குழுமத் தலைமையின் முதிர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறோம். நுட்பமான இந்த விவகாரத்தைக் கையாள வணிகத் திறனும், சம்பந்தப்பட்டவர்களிடையே நல்லிணக்கமும் தேவை.

டாடாவை உலகளாவிய நிறுவனமாக உருவாக்கியதில் பார்சி சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் பரந்துவிரிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ள குழுமத்தின் தலைமை, கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் என நம்புகிறோம்.

அந்நிய முதலீடுகள் வெளியேறுவது தொடர்பாகச் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்களிடையே நிலவும் கவலைகளை அரசு உணர்ந்துள்ளது. 2023–24-ம் ஆண்டிலும் வரிவிதிப்பு அமைப்பு இதேபோலத்தான் இருந்தது. அப்போது அதிகபட்ச அந்நிய முதலீட்டு வரவு பதிவானது. தற்போது சூழல் மாறியுள்ளது.

அந்நிய முதலீடுகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளபோதிலும், அதிகரித்துவரும் கவலைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. ஏழு சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைத் தக்கவைக்க மூலதனமும், குறிப்பாகப் பங்கு முதலீடுகளும் தேவை. சந்தைப் பங்கேற்பாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

டாடா நிறுவன விவகாரத்தில் இருதரப்பையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்த அரசு முயற்சிக்குமா என்பதற்கும், வரிக்குறைப்புக் கோரிக்கைகள் குறித்தும் குறிப்பிட்ட பதிலை அளிக்க அவர் மறுத்துவிட்டார். டாடா விவகாரத்தை உணர்வுபூர்வமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி
தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு - கோடக் ஏஎம்சி கணிப்பு
அடுத்த செய்தி
டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்